சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள சுகாதாரமற்றும்தீத்தடுப்புகுறைபாடுகளை 48 மணி நேரத்தில் சரி செய்ய நடவடிக்கை மாவட்ட ஆட்சியர்கார்மேகம் அதிகாரிகளுக்கு உத்தரவு.
சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள சுகாதாரமற்றும்தீத்தடுப்புகுறைபாடுகளை 48 மணி நேரத்தில் சரி செய்ய நடவடிக்கை மாவட்ட ஆட்சியர்கார்மேகம் அதிகாரிகளுக்கு உத்தரவு.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீ தடுப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது அதனடிப்படையில் சேலம் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு குறித்த பணியை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இன்று ஆய்வு மேற்கொண்டார் அரசு மருத்துவமனை முழுவதும் தீ தடுப்பு உபகரணங்கள் குறித்து கேட்டறிந்தார் அப்போது பல்வேறு இடங்களில் மோட்டார் உள்ளிட்ட தீ தடுப்பு உபகரணங்கள் குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு உபகரணங்கள் சில இடங்களில் குறைபாடு உள்ளது அதனை 48 மணி நேரத்தில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் தீ தடுப்பு குறித்து தனிக்குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் தொடர்ந்து அவர் பேசும்போது சேலம் மாவட்டத்தில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது தடுப்பூசி போட்டுக்கொள்ள அவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்
கொரானா தடுப்பு குறித்து பொதுமக்கள் அனைவரும் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்பதற்காக மக்கள் முக கவசம் அணியவேண்டும்
கொரானா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென மக்கள் நினைத்தால் மட்டுமே சாத்தியம் எனவே அபராத திற்காக அணியாமல் பாதுகாப்பிற்காக முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் தெரிவித்தார்
Post a Comment